சிறுபதிவு

இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொண்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம்

யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது

யோகேந்திர சிங்

யோகேந்திர சிங்

கிரெனெட் வீரர் யோகேந்திர யாதவ், டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற காடக் ப்ளாடூனில் ஜூலை 3- 4, 1999 ஆண்டு பங்கு பெற்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் இருந்தது. அத்தகைய பாதையில் தன் படையினருக்காக கயிறுகளை கட்டும் பணியை மேற்கொண்டார் யோகேந்திரசிங் யாதவ். அப்போது அதை கவனித்த பாகிஸ்தானியர்கள் குண்டுமழை பொழிந்தார்கள். இந்த தாக்குதலில் காடக் பிளட்டூனின் கமான்டர் உள்ளிட்ட பல வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஒட்டுமொத்த இந்திய ராணுவ தாக்குதலும் தோல்வி அடைந்து முடங்கும் நிலை உருவானது.

இதை கவனித்த கிரேனேடியர் யோகேந்திரசிங் யாதவ் சாமர்த்தியமாக குண்டு மழைக்கு நடுவேயும் தனி ஒருவராக முன்னேறி சென்று, கிரெனைடுகளை வீசியும், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் தீரும் வரையும் போரிட்டு நாலு பாகிஸ்தானியரை கொன்றார். எதிரியின் குண்டுகள் அவர் உடலை துளைத்தும் மரணிக்கும் கடைசி வினாடி வரை அவரது துப்பாக்கி குண்டுகளை உமிழ்வதை நிறுத்தவில்லை. யோகேந்திரசிங் யாதவின் வீர மரணத்தை கண்ட இந்திய ராணுவம் உத்வேகம் அடைந்து முன்னேறி சென்று டைகர் ஹில்ஸை தாக்கி கைப்பற்றியது.

கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம்வீர் சக்ரா விருது 

மனோஜ் குமார்

மனோஜ் குமார்

ராணுவத்தில் சேர்கையில் இன்டர்வியூவில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “நீ ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறாய்?” என்பது

அதற்கு மனோஜ்குமார் பாண்டே அளித்த பதில் “நான் பரம்வீர் சக்ரா விருதை வெல்ல விரும்புகிறேன்”!!! பரம்வீர் சக்ரா விருது வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வழங்கபடும் விருது.

இவர் கார்கில் போரில் ஜூபார் பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் பங்குபெற்றார். மிக குறுகலான பகுதியில் படைகளை வழிநடத்தி சென்றார். இதை கண்ட எதிரிகள் குன்டுமழை பொழிந்தார்கள். குண்டுகளை மார்பில் தாங்கியபடி வீர முழக்கம் எழுப்பியபடி முன்னேறி பாய்ந்தார் மனோஜ் பாண்டே. குண்டுகள் தீர்ந்த நிலையில் எதிரியின் முதலாவது பங்கரை அடைந்து அங்கே இருந்த இரு பாகிஸ்தானியரை வெறும் கையால் அடித்து கொன்றார். அதன்பின் குன்டுகாயத்தால் தம் இன்னுயிரை இழந்தார். தம் கேபட்னின் வீரமரணத்தை கண்ட இந்திய ராணுவத்தினர் உயிரை துச்சமென மதித்து முன்னேறி தாக்கினார்கள். கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த ஜூபார் பகுதி இந்திய ராணுவத்திடம் வீழ்ந்தது

 கேப்டன் விக்ரம் பாத்ரா, பரம்வீர் சக்ரா விருது

விக்ரம் பத்ரா

விக்ரம் பத்ரா

கேப்டன் விக்ரம் பாத்ரா 17,000 அடி உயரம் கொண்ட பாயின்ட் 5140 எனும் மலை சிகரத்தை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். தம் வீரத்துக்காக ‘ஷேர் ஷா (சிங்க ராஜா) என அழைக்கபட்ட விக்ரம், மலையின் பின்பகுதி வழியே எதிர்பாராதவிதமாக ஏறி தாக்குதல் தொடுத்தார். கடும் குண்டுமழைக்கு இடையே உடலெங்கும் குன்டுகாயங்களை தாங்கியபடி மலை உச்சியை நெருங்கிய விக்ரம் அங்கிருந்து சுட்டுகொண்டிருந்த எதிரியின் பீரங்கி மேல் இரு கிரனைடை எறிந்தார். அதில் இருந்து எதிரி மீள்வதற்குள் மலை உச்சியை அடைந்து மூன்று எதிரிகளை தனி ஒருவராக கொன்றார். அதன்பின் இந்திய படை மலை ஏறி எட்டு பாகிஸ்தானியரை கொன்று ஒரு பெரிய மெஷின்கன்னையும், கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த பாயின்ட் 5140வையும் கைப்பற்றியது. மலை உச்சியில் இந்திய கொடியைப் பறக்கவிட்டபின் விக்ரம் சர்மா தம் இன்னுயிரை நீத்தார்

ரைபிள்மேன் சஞ்சய் குமார், பரம்வீர் சக்ரா விருது

சஞ்சய் குமார்

சஞ்சய் குமார்

இவர் சாதாரண படைவீரர். ஆனால் அசாதாரணமான வீரத்தை களத்தில் காட்டினார். ஏரியா பிளாட் டாப் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற படையில் பங்கு பெற்றார். மலை உச்சியில் இருந்து எதிரிகள் சுட்டார்கள். குண்டுமழைக்கு நடுவே மலை ஏறும் நிலையில் 150 அடி தூரத்தில் எதிரி பங்கர் ஒன்றை பார்த்தார் சஞ்சய்குமார்

150 அடிதூர பங்கரை நோக்கி எழுந்து ஓடினார். எதிரிகுண்டுகள் அவர் மேல் பாய்ந்தவண்ணம் இருக்க மார்பில் மூன்று குண்டுகளை தாங்கியபடி ஓடினார். அடுத்த குண்டு அவரது மணிக்கட்டில் பாய்ந்து துப்பாக்கீயை வீழ்த்தியது. தளராமல் பங்கரை அடைந்து வெறும் கையால் மூன்று பாகிஸ்தானியரை அடித்து கொன்றார் சஞ்சய் குமார். அதன்பின் அவர்களின் இயந்திர துபாக்கியை எடுத்து இரண்டாவது பங்கரில் இருந்த பாகிஸ்தானியரை சுட்டுகொன்றார். அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தானியர் இரண்டாவது பங்கரை விட்டு ஓடினார்கள். ஏரியா பிளாட் டாப்பை இப்படி தனி ஒருவராக தன் இன்னுயிரை பலி கொடுத்து கைப்பற்றினார் சஞ்சய்குமார்.

மேஜர் சரவணன், வீர் சக்ரா விருது

மேஜர் சரவணன்

மேஜர் சரவணன்

மேஜர் சரவணன் படாலிக் பகுதியை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். கார்கில் போர் முழுக்க மலைபகுதியின் மேல் இருந்து தாக்கும் எதிரியை கீழே இருந்து தாக்கி அழிக்கும் நிலையிலேயே இந்திய படை இருந்தது. இப்போரில் மேலே இருந்து சுட்ட எதிரி மேல் ஒரு ராக்கெட்டை செலுத்தி இரு எதிரிகளை அழித்தார் சரவணன். அவர் உடலில் ஷார்ப்பனல் குண்டு பட்டபோது அவரது கமாண்டர் “போதும். சரவணன், வந்துவிடு” என அழைத்தார். தன் உயிர் போகும் நிலையை உணர்ந்த சரவணன் “இன்று இல்லை, காப்டன்” (Not today, captain) என சொன்னபடி குண்டுகளை வீசி மேலும் மூன்று எதிரிகளை வீழ்த்தியபின் கார்கிலின் வெண்பனியில் விழுந்து வீரமரணம் அடைந்தார்.

நாட்டுக்காக எல்லாரும் சிலவற்றை கொடுத்தார்கள். ஆனால் இம்மாவீரர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் தாய்நாட்டுக்காக ஈந்தார்கள். இவர்களை நினைவை நம் மனதில் என்னாளும் போற்றுவோம்

வந்தே மாதரம்! வெல்க பாரதம்!! வாழ்க இம்மாவீரர் புகழ்!!!

நன்றி : திண்ணை.காம்

கார்கில் வெற்றி தினம் – இன்று

Advertisements

நிமிர்ந்து நில் – 3

பாரதிய கட்டடக்கலை :

பாரத கலாச்சாரத்தில் இன்றும் மாறாமல் இருப்பவை நம் பண்டைய கால கோவில்கள் மற்றும் கட்டடங்கள்.

உலகின் பல்வேறு பாகங்களில் சிறப்பு வாய்ந்த கட்டடங்கள் தோன்றியுள்ளன, தோன்றிய அதே வேகத்தில் என்ன காரணத்திற்காக அவை தோன்றின என்ற குறிப்புகளும் கூட இல்லாமல் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன.

மாயன் பிரமிடுகள், இன்கா கட்டட அமைப்புகள், stone henge கட்டட அமைவு போன்றவை இதற்கான உதாரணங்களாக கூறலாம்.  அவை ஏன்-எதற்காக-யாரால் கட்டப்பட்டன போன்ற எந்த கேள்விகளுக்கும் தர்க்க ரீதியான பதில்கள் இல்லை. வெறும் யூகங்கள் மட்டுமே தலையை சுற்றி மிஞ்சி நிற்கும்.

இப்பதிவில் நம் பண்டைய கால கட்டட சிறப்புகளில் மிக மிக சிலவற்றை மட்டும் காணப்போகிறோம்.

நம் வசதிக்காக இரண்டு பிரிவாக பிரிக்கலாம். (இதற்கும் இன்றைய அறிவியல் ரீதியான பகுப்பிற்கும் சம்பந்தம் இல்லை)

 • கோவில்கள்
 • சமூக கட்டட அமைப்புகள்

1. கோவில்கள் :

நமக்குக் கோவில்கள் பற்றிய அறிமுகம் தேவை இல்லை, ஆனால் அவற்றின் கட்டடக் கலை நுணுக்கம் பற்றிய அறிவு தேவைப்படுகிறது.

எத்தனை வகை :

 • குப்தர் கால கோவில்கள்
 • வாதாபி சாளுக்கிய வடிவம்
 • பல்லவர் கால கோவில் மற்றும் சிற்பக் கலை
 • சோழர் கால கோவில் மற்றும் சிற்பக் கலை
 • கஜுராஹோ கோவில் வடிவம்
 • ஹோய்சளர் பாணி
 • விஜயநகர கோவில் பாணி
 • நாயக்கர் கால கோவில்கள்

இப்படி பல்வேறு கோவில் கட்டுமான வகைகள் அந்தந்த காலத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன.

நமக்கு மிகவும் அறிமுகமான தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், தில்லை நடராஜர் கோவில், அவற்றின் சிறப்புகள் சில.

1. பெருவுடையார் கோவில் 1003 ல் ஆரம்பித்து 1010 ல் முடிவுற்றது : தோராயமாக 60 மீ உள்ள கோபுரம், 35 உட்கொவில்கள், இரண்டவது கோபுரம் என்று இத்தனை கட்டட வடிவங்களும் செய்து முடிக்க 7 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. இன்று ஒரு பாலம் கட்ட நமக்கு இதைவிட அதிகமான காலம் தேவைப்படுவதை காணும்போது நம்முடைய தொழில்நுட்பம் மலைக்க வைக்கிறது.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

2. எங்கேயிருந்தது கல்? : காவேரி பூமி ஒரு சம தள பூமி என்று தெரியும், அதை சுற்றி அருகில் மலை எதுவும் கிடையாது. பின் எங்கேயிருந்து கிடைத்தது இவ்வளவு பெரிய கோவில் கட்டுவதற்கு கல்? திருச்சிக்கு 60 கி.மீ தொலைவுலுள்ள நார்த்தாமலையிலிருந்து கொண்டு வந்தார்கள்.

பெருவுடையார் கோவில் முழுத் தோற்றம்

பெருவுடையார் கோவில் முழுத் தோற்றம்

3. ஒரே சிற்பம் இரண்டு பாவங்கள் : மோனலிசா ஓவியத்தை சிலாகித்து பல்வேறு ஓவியர்கள் கூறியிருகின்றனர், அதேவேளையில் இங்கே தில்லை நடராஜர்  கோவிலில் கஜசம்ஹார மூர்த்தி சிற்பம் உள்ளது. பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

4. நடராஜர் கோவில் : இது புவியின் காந்த மையக்கோட்டின் மையத்தில் அமைந்திருக்கிறது. எந்த விதமான புவியியல் அறிவுக் கூர்மை இருந்திருந்தால் இதை செய்திருக்க முடியும்?

நடராஜர் கோவில்

நடராஜர் கோவில்

5. பொற்கூரையின்  சிறப்பு : பொன்னம்பலத்தில் உள்ள கூரையில் 21,600 பொன் ஓடுகள் உள்ளன, அவை தினமும் விடும் மூச்சின் எண்ணிக்கையை குறிக்கின்றன. 72,000 தங்க ஆணிகளால் இணைக்கப்பட்டுள்ளது, நம் உடலின் மொத்த நாடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
பொன்னம்பலம்

பொன்னம்பலம்

6. நேர்க்கோட்டில் நிற்கும் ஸ்தலங்கள் : சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் கோவில் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன. இது தற்செயல் அல்ல. இம்மூன்று திருக்கோவில்களும் 79° 40′ கிழக்கு அட்ச ரேகையில் அமைந்திருக்கின்றன. இது நமது முன்னோர்கள் பொறியியல், வானியல் தொழில்நுட்பத்தில் சிறந்திருந்ததற்க்கான உதாரணம்.

நேர்கோட்டில் நிற்கும் ஸ்தலங்கள்

நேர்கோட்டில் நிற்கும் ஸ்தலங்கள்

7. ஆயிரம் கால் மண்டபம் : ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பு, அந்த எல்லா தூண்களும்  அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அச்சு பிசகாமல் நிற்கின்றன. இது சாதாரண விஷயம் அல்ல.

ஸ்ரீரங்கம் கோவில் ஆயிரங்கால் மண்டபம்

ஸ்ரீரங்கம் கோவில் ஆயிரங்கால் மண்டபம்

ராமேஸ்வரம் கோவில்

ராமேஸ்வரம் கோவில்

உலக அதிசயமாக சரியாக கட்டப்படாத ஒரு சாய்ந்த கட்டடத்தை போற்றும் இந்த உலகிற்கு இது சாதாரணமாகத் தான் தோன்றும் போல.

2. சமூகக் கட்டட அமைப்புகள்:

 1. மாமல்லபுரம் சிற்பங்கள்
 2. கொனார்க் சூரியக் கோவில்
 3. பௌத்த தலங்கள்
 4. மொகஞ்சதாரோ பெரு குளியல் தொட்டி
 5. அரண்மனைகள்
 6. குதூப் மினார்
 7. தாஜ் மஹால்

போன்றவைகளை இதில் வகைப்படுத்தலாம்.

மேலும் இது பொன்ற எண்ணற்ற பல கட்டடக் கலை பொக்கிஷங்கள் நம் நாட்டின் எல்லா மூலைகளிலும் உள்ளன. இவற்றின் சிறப்பை நாம் அறியாமல் இருக்கிறோம். சரி அறியாமல் விட்டதோடல்லாமல் அவற்றின் அழகை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கோவில் மதில் சுவரில் போய் நமது பரீட்சை எண்ணை எழுதி வைப்பது, கோட்டைகளுக்கு சென்று வந்தால் அங்கே நமது பெயரை பதிவு செய்வது, மாநகர பேருந்துகளில் எழுதும் வழமை நமக்கு எல்லா இடத்திலும் எழுதும் சுதந்திரத்தை கொடுத்துவிடுகிறது.

போற்றி பாதுகாக்க வேண்டிய பல கலை வடிவங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறோம். மேல் நாட்டவர்கள் தங்கள் கலை வடிவங்கள் 100 வருட பழமையானது தான் என்றாலும் சிறப்பாக பாதுகாக்கின்றனர். ஆனால் நாமோ ஆயிரமாயிரம் ஆண்டு பழமையான கலை வடிவங்களை பாதுகாக்கவில்லையென்றாலும் குறைந்தபட்சம் சிதைக்காமல் இருப்பது நலம்.

பாரதீய கட்டடக் கலையில் இங்கு நான் கொடுத்திருப்பது ஒரு சிறு துளி தான். அதுவும் நாம் இங்கு பார்க்கும் தென் பாரதக் கட்டக்கலைகளை மட்டுமே. இவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

கொத்துமல்லி:

உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவில் இருப்பது கம்போடியாவில், சோழர்கால கட்டடக் கலை மற்றும் க்மேர் கட்டட கலையின் இணைவாக இந்த கோவில் இருக்கிறது. கடல் கடந்தும் வாழ்கிறது நமது கலை.

முந்தைய பதிவுகள்:

நிமிர்ந்து நில் – 1 

நிமிர்ந்து நில் – 2

டிசம்பர் 16 – வெற்றித் திருநாள்

டிசம்பர் – 16 1971.

நம் நாடு ஒரு மகத்தான, தீர்மானமான!!! வெற்றியை அடைந்த நாள்.

உலகம் காணாத அதிசயமாக தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு அரசு அதன் இனவெறி காரணமாக கொன்றொழிக்க முற்பட்டது. ஆம், பாகிஸ்தான் பாரதத்திலிருந்து பிரிந்த போது, கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் என பிரிந்தது.

மதத்தால் இசுலாமியராயினும், இனத்தால் வங்காளிகளாக இருந்தனர் கிழக்கு பாகிஸ்தானிய (இன்றைய பங்களாதேஷ்) மக்கள், அவர்கள் தாங்கள் மேற்கு பாகிஸ்தானால் வஞ்சிக்கப்படுகிறோம் என்று எண்ண துவங்கினர்.

வங்காள மொழி தேசிய மொழி ஆக்கப்படாதது, மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு சரியான நிதி ஒதுக்காதது, சரியான உள்கட்டமைப்பு செய்யாதது போன்ற காரணங்களால் கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் மேற்கு பாகிஸ்தானிடம் வெறுப்படைந்திருந்தனர்.

அப்போது நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானின் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான  அவாமி லீக் 167 இடங்களில் (167/331 ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை) வெற்றி பெற்று அரசமைக்க பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கானிடம் உரிமை கோரியது. ஆனால் அவரோ கிழக்கு பாகிஸ்தான் மேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். முஜிபுரை மேற்கு பாகிஸ்தானுக்கு கைது செய்து கொண்டு செல்லப்பட்டார். அவாமி லீக் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். மேற்கு பாகிஸ்தான் மக்கள் கிழக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். பலரும் அகதிகளாக பாரத நாட்டிற்கு புகலிடம் தேடி வந்தனர். இதனால் கோபமுற்ற மேற்கு பாகிஸ்தான், பாரதத்தின் மேல் பாகிஸ்தானிய விமான படை மூலமாக தாக்குதல் நடத்தி போரை தவிர்க்க முடியாததாக்கியது. டிசம்பர் 3ம் தேதி மேற்கு பாகிஸ்தான் மீதான போரை பாரதம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இது முன்கதை சுருக்கம்.

இதன் பின் நடந்தது வரலாறு. உலகில் உள்ள எந்த நாட்டின் ராணுவத்தாலும் செய்ய முடியாத ஒரு மகத்தான வெற்றியை நம் ராணுவம் எய்தியது. தரை, வான் மற்றும் கடல் படைகள் மேற்கு பாகிஸ்தானின் மேல் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டின. அப்போது நம் ராணுவத்தினர் செய்த சில சாகசங்களை பட்டியலிடுகிறேன்.

1. வான் வழி (Indian Air force)

IAF in Action

IAF in Action

டிசம்பர் 5 : ஸ்குவாட்ரன் லீடர் பாலி தலைமையில் அன்று முழுவதும் நம் நாட்டின் விமானப் படை அடுத்தடுத்த தாக்குதல் மூலமாக எதிரி நிலைகளை கடும் சேதாரத்திற்கு உள்ளாக்கி அவர்களின் போர் வியூகத்தை உடைத்தது. அதில் பாகிஸ்தானின் 54 T-59 மற்றும் ஷெர்மன் டாங்குகளில் 40 முற்றிலும் அழிக்கப்பட்டன அல்லது கைவிடப்பட்டன. 138 மற்ற வாகனங்களும், 5 பீல்டு கன்களும் மற்றும் 3 விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் அழிக்கப்பட்டன.

சண்டை நடைபெற்ற லோங்கேவாலா பாலைவன பகுதி இரும்பு சுடுகாடு போல காட்சியளித்தது. அங்கே இருந்த எதிரி டாங்குகள் பாலை மணலில் கிறுக்கு பிடித்தவைபோல சுற்றி சுற்றி மணலை கிளப்பி விட்டு தங்களை காத்துக் கொள்ளப் பார்த்தன. எனினும் அவை தப்பிக்க முடியவில்லை.

டாங்கு தடங்கள்

டாங்கு தடங்கள்

மேலே காணப்படும் படம் விங் கமாண்டர் RS பெனெகல் என்பவரால் பிடிக்கப்பட்டது. இன்று இது வாயு பவனின் (விமானப்படை தலைமையகம்) நுழைவு வாயிலை அலங்கரிக்கின்றது.

அப்பொது பாகிஸ்தானிய படை அனுப்பிய செய்தியை ராணுவம் இடைமறித்து கேட்ட செய்தி, கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

“The enemy air force has been creating havoc – One aircraft leaves and another comes and stays overhead for twenty minutes. 40% troops and tanks have been destroyed, injured or damaged. Further advance has become very difficult. Send air force for help as soon as possible otherwise even a safe withdrawal would be difficult.”

இதன் பிறகு நம்முடைய தரைப்படை எளிதாக டாக்காவைக் கைப்பற்றி பாகிஸ்தானிய ராணுவம் முன்னேறாமல் தடுத்தது.

2. கப்பல் படை (Indian Navy)

பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமேரிக்கா தனது மாபெரும் போர்க்கப்பலான USS Enterprise ஐ வங்காள விரிகுடாவிற்கு அனுப்பியது.

USS Enterprise - The Big 'E'

USS Enterprise – The Big ‘E’

அதன் பிரமாண்டத்தின் காரணமாக அது The Big ‘E’ என்று அழைக்கப்பட்டது. 90 போர் விமானங்கள், 3000 வீரர்கள், 1800 போர் விமானிகள் மற்றும் பல வகையான ஆயுதங்கள் கொண்டு ஒரு மிதக்கும் ராணுவமாக இருந்தது. அதை எதிர்கொண்ட நமது நாட்டின் கப்பல் படை தளபதி எதிர்கொண்ட விதம் நமக்கு நிச்சயம் வியப்பளிக்கும்.

அதை அவரே விவரித்திருக்கிறார் :

“டிசம்பர் 15 அன்று INS Vikrant தனது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. எனக்கு BBC மூலமாக Big E வங்காள விரிகுடா நோக்கி வருவது பற்றி தெரிந்தது. தலைமையகத்திலிருந்து குறிப்பு வருமென்று காத்திருந்தேன், ஆனால் எதுவும் வரவில்லை. அன்றிரவு நானே முடிவெடுத்து Big E போர் களத்திற்கு வருமுன்னரே தடுத்து நிறுத்த புறப்பட்டேன். அப்போது ஒரு ஊழியர் என்னிடம் கேள்வி கேட்க அனுமதி கேட்டார், நானும் அனுமதித்தேன். அவர் ஐயா! Big ‘E’ ஐ பார்த்ததும் என்ன செய்வீர்கள்?

இதே கேள்வி தான் என் மூளையையும் குடைந்து கொண்டிருந்தது, இருந்தும் நான் தயங்காமல் கூறினேன் “கவலைபடாதே இளைஞனே! அமேரிக்கா ஒரு நட்பான நாடு, அதனால் வரவேற்பு கூறி தங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்பேன்” என்றேன்.

அதற்கும் அந்த ஊழியர் திருப்தி அடையாமல் “அது நம் மீது தாக்குதலை ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்று கேட்டார்.

எனக்கு கப்பற்படை கல்லூரியில் பயின்றிருக்கிறேன் மற்றும் எனக்கு அமெரிக்கர்களின் உளவியலும் தெரியும். ஒருவேளை Big ‘E’ நம்மை தாக்கினால், ஆபிரகால் லிங்கன் தன் கல்லறையிலிருந்து எழுந்து பார்ப்பார் (Improbable)”

என்ன ஒரு துணிச்சல் இருந்தால் இப்படி ஒருவரால் கூற முடியும். INS  Vikrant மற்றும் Big ‘E’ பற்றிய ஒப்புமை காண இந்த சுட்டியை பார்க்கவும், ஒரு மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம் தெரியும்.

3. காலாட்படை (Indian  Army)

டிசம்பர் 16 அன்று லெப்டினன்ட் கலனல் ஹனூத் சிங் கௌர் தலைமையில் 47 பேர் கொண்ட படை பிரிவு பசந்தார் ஆற்றுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அதன் தரைபடை எளிதாக உள்ளே சென்று எதிரிகளை தாக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தது. எதிரிகளின் கவச வியூகத்தை (armour attack) தகர்த்து தனியொரு ஆளாக தீரத்துடன் செயற்பட்டு தன் படைக்கு ஒரு முன் உதாரணமாக இருந்தார்.

கெடு

கெடு

சரணடைந்த பத்திரம்

சரணடைந்த பத்திரம்

இதனால் எழுச்சி பெற்ற வீரர்கள் பாகிஸ்தானின் 48 டாங்குகளை தகர்த்தெறிந்தனர். இவரை பசண்டார் போரின் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இது போன்ற எண்ணற்ற வீரர்களின் சாகசங்களால், மேற்கு பாகிஸ்தானின் ராணுவ தளபதி நியாசி போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஆனால் நம் நாட்டின் ராணுவ தளபதி போர் நிறுத்தத்தை ஏற்காமல் முழுவதுமாக சரணடைய கேடு விதித்தார். இது ராணுவ வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த முடிவாக கருதப்படுகிறது.

அதனால் 90,368 பேர் சரணடைந்தார்கள். அது வரை எந்த நாட்டின் ராணுவ வரலாற்றிலும் இடம் பெறாத அதிசய உண்மை. 13 நாளில் போர் முடிவுக்கு வந்தது.

சரணடைந்தவர்கள் எண்ணிக்கை:

Branch  captured Pakistani POWs

Army 54,154
Navy 1,381
Air Force 833
Paramilitary including police 22,000
Civilian personnel 12,000
Total  90,368

பாரதம் 1971 பாகிஸ்தானுக்கு எதிரான போரில் புகழ் வாய்ந்த ஒரு வெற்றியை பெற்றது. இதுவே நூற்றாண்டுகளில், ஒரு பெரிய போரின், மிக தீர்க்கமாக பெறப்பட்ட வெற்றியாகும். பாரதம் தனியொரு நாடாக இருந்து, ஐ.நா சபை உறுப்பு நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஒரு வல்லரசையும் மீறி அடைந்த வெற்றி. இது பாரத வரலாற்றில், ஒவ்வொரு தேசப்பக்தனும் பெருமை கொள்ளக் கூடிய மின்னும் அத்தியாயமாகும்.

கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற நாடாக உருவானது. இதன் மூலமாக சுதந்திரமடைந்தது அதன் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழி உண்டானது,

கொசுறு :
பாகிஸ்தான் தான் செய்த தவறை மறைத்து,  தான் தோற்றதையே ஒரு தபால் தலையாக வெளியிட்டு தன் தலையில் தானே மண் வாரி இறைத்துக் கொண்ட ‘துன்பியல்’ சிரிப்பும் நடைபெற்றது. இதில் இடம்பெற்றுள்ள வாசங்கங்களை படித்துப் பார்த்தால் மேற்கு பாகிஸ்தானால் கொல்லப்பட்ட 3 லட்சம் பங்களாதேஷ் மக்களின் ஆன்மா சும்மா விடுமா.
பாகிஸ்தானின் கேலிக் கூத்து

பாகிஸ்தானின் கேலிக் கூத்து

இணைப்பு

பாரதிய மருத்துவம்:

சென்ற பதிவின் முடிவில் கேட்ட கேள்வி – சுஸ்ருதர் யார் ?
1. முதல் அறுவை சிகிச்சை நிபுணர்.

2. முதல்  பிளாஸ்டிக் சர்ஜன் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை) நிபுணர்

3. முதல் கண் அறுவை சிகிச்சை நிபுணர்.
மேலே கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் சுஸ்ருதர்.

சுஸ்ருதர்:

இவர் வாழ்ந்த காலகட்டம் கி.மு 6ம் நூற்றாண்டு, இன்று மருத்துவத்தின் தந்தை என கூறப்பெறும் ஹிப்போக்ரடஸிற்கு (Hippocrates) 150 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலகட்டத்திற்கு, நம்மால் சற்றும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல்வேறு அறிவியல் சாதனைகளை மருத்துவ உலகில் செய்துள்ளார்.

இவர் உடற்கூறியல், நோய் அறிவியல், கருவியல், செரிமானம், வளர்சிதை மாற்றம், மரபியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்தார். இன்றைய கங்கை கரை நகரமான பனாரசில் வாழ்ந்து தன்னுடைய கலையை வளர்த்து வந்தார். கூர்மையான கவனிக்கும் திறத்தினால் பல கண்டுபிடிப்புகளை மருத்துவ உலகிற்கு அளித்துள்ளார்.
Diagnosis எனும் நோயறிதலில் பல்வேறு யுக்திகளை கூறியுள்ளார், நோயாளியின் சிறுநீர் மூலம், அது தேன் போல இனிப்பாக இருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதை கூறினார். அதனால் மதுமேகம் என்று அழைத்தனர் (மது – தேன், மேகம் – நோய்).

சுஸ்ருத சம்ஹிதை :

சுஸ்ருதர் தான் கண்டுப்பிடித்த, பயன்படுத்திய, தான் பயிற்சி செய்தவற்றை முழுமையாக ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார், அதுவே சுஸ்ருத சம்ஹிதை.

இது இரண்டு பகுதியாக உள்ளது.

1. பூர்வ தந்த்ரம்

2. உத்தர தந்த்ரம்

இதில் மருந்து பயன்பாடு, குழந்தை மருத்துவம், முதியோர்கள் பற்றிய மருத்துவ துறை, காது, மூக்கு, தொண்டை மற்றும் கண், நச்சுயியலின் நோய்கள் மற்றும் உளவியல் நடைமுறைகளை விவரிக்கின்றார்.

அறுவை சிகிச்சை குறித்து அவர் கூறும் கருத்துகள் இன்றைய மருத்துவ புத்தகங்களுக்கு சற்றும் குறையாதவை. அவர் கூறும் முறைகள் :

 1. சேதனா : வெட்டி நீக்குதல் – பழுதடைந்த உறுப்பை முழுவதுமாக எடுத்துவிடுவது.(ஏதாவது உடல் உறுப்பு (கை, கால்) சரி செய்யமுடியாதபடி பாதிக்கப்பட்டால் செய்வது) பின் செயற்கை கால்கள் பொருத்துவது. (ஆம், செயற்கை கால்கள் அப்போதே இருந்தன)
 2. பேதனா : கீறி அறுத்தல் – உள்ளுறுப்புகளில் தேவையற்ற பொருட்கள் (Foreign bodies) வெளியேற்றுவது.
 3. லேகனா: தேவையற்ற சதையை நீக்குதல். (அல்சர் கட்டி போன்றவை)
 4. வ்யாதனா : துளையிடுதல் –  சிரைகளின் (veins) வீக்கம்,  விரை வீக்கம், வயிறு பகுதிகளில் உள்ள தேவையற்ற திரவம் (ascitic fluid), போன்ற நோய்களை சரி செய்ய அங்கே துளையிட்டு வெளியற்றுவது.
 5. ஈசனா : உட்செலுத்துதல் – sinuses போன்றவற்றுக்கு.
 6. ஷ்ராவனா : கேட்ட ரத்தத்தை வெளியேற்றுவது.(தோல் நோய்கள், வீக்கம்)
 7. ஸ்வானா : தையல் – விபத்தாலோ, மருத்துவ தேவைக்காகவோ ஏற்ப்பட்ட காயங்களை தைப்பது.

மேலும் இதில் 120 அறுவை சிகிச்சை உபகரணங்கள், 300 அறுவை சிகிச்சை வழிமுறைகள், 600 விதமான மருந்துகள் – அவைகளை மூலிகை, வேதி பொருட்கள் மூலம் செய்யும் முறைகள், காயங்கள், வயது முதிர்ந்த மற்றும் மன நோய் தொடர்பான நோய்கள் உட்பட 1120 மருத்துவ நிலைமைகளை, பட்டியலிடப்பட்டுள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி:

இவரின் பிளாஸ்டிக் சர்ஜரிக்கான பல நுட்பங்கள் இன்றளவும் மாற்றமில்லாமல் இருக்கிறது. மூக்கு மறு பொறுத்து சிகிச்சை (Nose transplantation) இவருடையே அதே முறை தான் அப்படியே பயன்படுத்தப் படுகிறது. இதனால் இவரை மேற்குலகம் இன்று பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என்று கூறுகிறது.

தம்முடைய மாணவர்களுக்கு சுரைக்காய், வெள்ளரிக்காய், இறைச்சி, தோல், தாமரைத்தண்டு மூலம் அறுவை சிகிச்சை செய்ய கற்றுக்கொடுத்தார். உடற்கூறு பற்றி அறிய இறந்த உடல்களை பயன்படுத்தி எடுத்துரைத்தார்.

இன்றைக்கு மருத்துவ மானவர்கள் எடுத்து கொள்ளூம் உறுதி பிரமாணம் போலவே இவருடைய சீடர்களும் உறுதி பிரமாணம் எடுத்துள்ளனர். அந்த உறுதி மொழி கீழே :

“மனிதநேயத்துக்குக் களங்கம் விளைக்கும் காமம், கோபம், குரோதம், கர்வம், பேராசை, பொறாமை, அறியாமை, முரட்டுத்தனம், கபடம் போன்ற குணங்களைக் கைவிட்டு … துறவியைப் போலத் தனித்திருந்து சத்தியம், சுயகட்டுப்பாடு, ஆகியவற்றை மேற்கொண்டு … ஆதரவற்றோர், தூரதேசத்தவர் அனைவருக்கும் மருத்துவ உதவியளிப்பேன் என்று குருவின் சொற்படி கீழ்ப்படிந்து உறுதி கூறுகிறேன்”

 

இவரை போல பலர் நம் நாட்டில் இருந்துள்ளனர். சரகர், மாதவர்,  நாகார்ஜுனர் போன்ற பல புகழ்பெற்ற மருத்துவர்கள் இன்று நம் தலைமுறைக்கு தெரிவதில்லை.


சுஷ்ருத சம்ஹிதை மற்றும் சரக சம்ஹிதா இரண்டும் 8 ஆம் நூற்றாண்டில் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாரசீகம் வழியாக போர்சுகல், கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு சென்றது.

மேலதிக விவரங்களுக்கு :

சுஸ்ருத சம்ஹிதை விக்கிபீடியா

Home of Ayurveda

வலைப்பூ

Infinity foundation link

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/9476614

http://www.ispub.com/journal/the-internet-journal-of-plastic-surgery/volume-4-number-2/sushruta-the-first-plastic-surgeon-in-600-b-c.html

http://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/Sushruta.html

http://www.clinicolymp.com/www.gesaps/web.gesaps.com.en/Sushruta.htm

நிமிர்ந்து நில்-1

பாரதம்

பாரதம்

நாம் சிறு வயதிலிருந்து பள்ளியில் படித்த வரலாற்றை சற்று கூர்ந்து பார்த்தால் நமக்கு சில விஷயங்கள் புலப்படும். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளைய அரசாங்க அதிகாரிகளை பற்றி மிகவும் பெருமையாக படிப்போம், எ.டு. லார்டு வில்லிங்டன், லார்டு கன்னிங். அதாவது நம்மை அடிமைபடுத்தியவர்களை பிரபு என்றும் லார்டு என்றும் அழைப்போம்.

ஏதோ அவர்கள் தான் நம்மை செம்மைபடுத்தி, நாகரிகமானவர்களாக மாற்றினார்கள் என்றும் அவர்கள் வரும் முன் நம் தேசம் காட்டு மிராண்டிகளாக இருந்தது போலவும் படிப்போம்.
நம்மிடம் பெரிய அரசர்கள் யாரவது சொல்லுங்கள்  என்றால் உடனே அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன், அக்பர் போன்றவர்கள் தான் நினைவுக்கு வருவர். ஏன் நம் நாட்டில் இது போன்ற அரசர்கள் இருந்ததில்லையா? ஒரு ராஜ ராஜ சோழனோ, வீர சிவாஜியோ, எதிரிகளையும்  மன்னித்து விட்ட ப்ரித்வி ராஜ சௌஹான் போன்றவர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்?விடா முயற்சி என்றால் நினைவுக்கு வருவது கஜினி, ஒரு கொள்ளைகாரனை விடா முயற்சியின் சின்னமாக அங்கீகரித்திரிக்கிறோம். ஒரு கொள்ளைக்காரனை பற்றி பெருமையாக படிக்க என்ன காரணம்?
விஞ்ஞானிகளை பற்றி சொல்லவே வேண்டாம், மேற்கத்திய விஞ்ஞானிகளை தான் நமக்குத் தெரியும், நம்முடைய தொழில்நுட்ப அறிவு எப்படிப்பட்டது?  நம்முடைய விஞ்ஞானிகள் யார், எப்படிப்பட்டவர்கள், அவர்கள் செய்த சாதனை என்ன?
இப்படி பல கேள்விகள் நம்மிடம் இயற்கையாக எழ வேண்டிய கேள்விகள் கூட நம்மிடம் எழுவதில்லை, ஏன்? உண்மையிலேயே நம் நாடு காட்டுமிராண்டிகளின் தேசமாக இருந்ததா?இதற்கான பதில், கண்டிப்பாக இல்லை என்பதே ஆகும்!!நாம் இப்படி நம் நாட்டை பற்றிய பெருமைகளை அறிந்து கொள்ளாமல், மேற்கத்திய கலாச்சாரத்தையும், மேற்கத்திய அறிவியலை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பக் காரணம் நம்முடைய கல்வி முறை தான்.  இந்த கல்விமுறை நம்மிடம் வெள்ளையர்களால் திட்டமிடப்பட்ட ரீதியில் திணிக்கப்பட்டது.

இந்த கல்விமுறையை அறிமுகப்படுத்திய “மெக்காலே” நம் நாட்டின் அப்போதைய கல்வி முறையை மாற்ற வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பித்த “Minutes of Education” ன் சாராம்சம் நாம் கீழே காணப்போவது.

“A class of persons Indian in blood and color, but English in tastes, in opinions, in morals and in intellect.”

உடலளவில் பாரதீயனாகவும், மனதளவில் ஆங்கிலேயனாகவும் இருக்கக் கூடிய மக்களை உருவாக்கவே இந்த கல்விமுறையை திணித்தார்கள். நம்மை பற்றி சிறுமை படுத்தி படித்ததால் நம்மிடம் மனவுறுதி குறைந்தது, மன உறுதி குறைய குறைய நாம் வீழ்ந்தோம். இன்றும் அதே கல்வி முறைபின்பற்றப்படுவது  நம் துரதிருஷ்டம்.

இந்த  லிங்க்கில் மெக்காலே கூறிய விஷயத்தை காணலாம், அதனுடைய தமிழாக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம்

மெக்காலேயின் கருத்து

மெக்காலேயின் கருத்து

நம் நாட்டின் பெருமையான பல விஷயங்களை நாம் மறந்து போனவற்றை நிகழ் தலைமுறைக்கு சொல்லவே இந்த சிறிய முயற்சி. நம்மை பற்றிய பெருமித உணர்வு வராமல் நம்மால் சாதிக்க முடியாது, அதை முறியடித்து நம் அனைவரையும் நிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும், அது நம்மால் முடியும்.

Macaulay

மெக்கலேயின் விஷக்கனி

மெக்கலேயின் விஷக்கனி

கொத்துமல்லி :இது அறிமுக பதிவு, அடுத்த பதிவிலிருந்து தலை நிமிர்வோம்.  ஒரு கேள்வி – சுஸ்ருதர் யார் என்று தெரியுமா? விடை அடுத்த பதிவு.